பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் குருவும் சீடனும் * {}} குற்றத்திற்காகத் தண்டனை தர நினைத்து கண்ணனாகிய சீடன் வலிந்து கவிஞரைச் சார்கின்றான். மாயக் கண்ணன் அல்லவா? வந்தவன் புகழ்ச்சிகள் (முகஸ்துதி) கூறுகின்றான்; கவிஞரின் புலமையை வியப்பான் போலப் பாசாங்கு பண்ணுகின்றான். பலவகை யால் அகப்பற்றுறச் செய்கின்றான். வெறும் வாயை மெல்லும் கிழவிக்கு அவல் கிடைத்தால் சொல்ல வேண்டுமா? கவிஞருக்குத் தன் முனைப்பும் தற்பெருமை யும் சுரம்போல் ஏறுகின்றன. கண்ணனுக்கு அறிவு கொளுத்தத் தொடங்குகின்றார். இன்னது செய்திடேல் இவரோடு பழகேல் இவ்வகை மொழிந்திடேல், இணையன விரும்பேல் இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், இன்னவ குறவுகொள், இன்னவை விரும்புவாய்' என்று பல்வேறு "தருமங்களை எடுத்து ஒதுகின்றார்: ஓய்விலாது அவனோடு உயிர் விடுகின்றார். ஒதினவையெல்லாம் செவிடன் காதில் ஊதின சங்கு கொலிபோ லாகின்றன. கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம் எதிர்செயும் மனைவிபோல் இவனும் நான் காட்டும் நெறியினுக் கெல்லாம் நேர்எதிர் நெறியே நடப்பா னாயினன். இந்நில வுலகில் மக்களின் மதிப்பையும் அவர்தம் புகழுறு வாழ்வையும் தெய்வமாகக் கொண்டவர் கவிஞர். 10. இந்தச் செயல் இக்காலத்திலுள்ள கிழங்களை’ நினைவு கூரச்செய்கின்றன. எங்கணும் பிறர்க்கு உபதேசம் செய்வதைத்தான் காண்கின்றோம். -