பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் குருவும் சீடனும் ፲ 03 வழிகளைக் கையாண்டும் கண்ணனைத் தன் வழிக்குக் கொண்டுவர முயல்கின்றார். பயன்? கண்ணன் பித்தாய்க் காட்டா ளாகி எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற்றவனாய், எவ்வகைப் பயனிலும் கருத்திழந் தவனாய் குரங்காய்க் கரடியாய்க் கொம்பிடைப் பிசாசாய் யாதோ பொருளாய், எங்ங்னோ நின்றான். கவிஞரின் அகந்தையும் மமதையும், தலைதுாக்கி நின்றன. கண்ணனை நேரில் கண்டு பேச நினைக்கின்றார், இவனை ஓர் தொழிலில் ஈடுபடச் செய்தால் கடைத்தேறு வான் என நினைக்கின்றார். அதற்கேற்ற சமயம் வருங்கால் அவ்வாறு செய்யலாம் என்று காத்திருக் கின்றார். ஒருநாள் கண்ணனைத் தன் வீட்டிற்குத் தனியாக இட்டுச்சென்று அன்பாகப் பேசுகின்றார். "மகனே, நீ வரம்பிலா நேசமும் அன்பும் உடையை. நான் ஒன்று கேட்பேன். நீ அதைச் செய்வாய் எனக் கருது கின்றேன். சேர்க்கையின்படியே மாந்தரின் செயல் எல்லாம் அமைகின்றன. வயிற்றுப் பிழைப்புக்காகப் ப்ொருள்தேடி அலையும் நேரம் போக, சாத்திர நாட்டமும் தருக்கமும், கவிதையில் மெய்ப்பொருள் ஆய்வதில் பேரார் வமும் கொண்ட ஒருவருடன் சேர்ந்திருப்பதால் எனக்கு நன்மை உண்டு. நீயோ மிக்க அறிவுடையவன். உன்னைத் தவிர வேறொருவரை அறிந்திலேன். என் பயன் கருதி என்னுடன் சிலநாள் நீ இருக்குமாறு வேண்டுகின்றேன்." என்று தம் விருப்பத்தை வெளியிடுகின்றார். கண்ணனும் "அங்ங்ணே புரிவேன். சோம்பலில் என்னால் காலத்தைக் கொன்னே கழித்தல் இயலாது. ஆகவே, எனக்கு ஒரு தொழிலைக் காட்டுவாய்' என்று மறுமொழி பகர்கின்றான். கவிஞனும்,