பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗蠻靈 கண்ணன் பாட்டுத்திறன் "என் செய்யுளை எல்லாம் 3.ゞ > ார் பிரதியில் நாடொறும் எழுதிக் கோடுத்திடுந் தொழிலினைக் கொள்ளுதி' என்று வேலை தருகின்றார். "என் செய்யுளை எல்லாம் தல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் கொடுத்திடுத் தொழிலைக் கொள்ளுதி' என்று வேண்டு கின்றார் கவிஞர். ஒப்புக்கொண்டவன் ஒரு நாழிகை இருத்து ஏக முயல்கின்றான். பழங்கிதை யொன்றைப் படி எடுத்துத் தகுமாறு பணிக்கின்றார் கவிஞர். இணங்கு வது போன்று நடித்திட்டு மறுகணம் கம்பிநீட்ட நினைக் கின்றான் மாயக் கண்ணன். கவிஞர் சினம் கொள்ளு கின்றார் : "ஏதடா சொன்ன சொல் மாறுகின்றாய். இரார் உன்னைப் பித்தனென்று உரைப்பது உண்மை பாயிற்றோ?' என்கின்றார். "நாளை வந் திவ்வினை நடத்துவேன்" என்கின்றான் கண்ணன். கவிஞரின் சினம் உச்ச நிலையை எட்டுகின்றது, 'இப் பொழுதே இதனைச் செய்வாயா? செய்யாயா? உடன் பதில் தருக" என்று உறுமுகின்றார் கவிஞர். 'இல்லை” என்கதை இமைக்குமுன் கூறினான் கண்ணன். கவிஞரின் சினம் வெள்ளம்போல் பாய்கின்றது. கண்கள் சிவந்து இதழ்களும் துடிக்கின்றன; "சீச்சி, பேய் நீ. இனி சிறிது தோம்கூட என் முன் நில்லாதே இனி என்பக்கம் தலை இாட்டாதே. பேச போ போ' என்று சொற்களை வெடிக் கின்றார். கண்ணனும் எழுந்து செல்குவானாயினன். கவிஞரிடம் இரக்க உணர்ச்சி தோன்றுகின்றது. விழி நீர் பெருக்கெடுக்கின்றது. சினத்தி அந்நீரில் அழிகின்றது. கவிஞர் பேசுகின்றார்: 'மகனே, சென்று வா. தேவர்கள் உன்னைக் காக்கட்டும். உன்னை மேம்பாடுறச் செய்ய ஏதேதோ செய்தேன். அவற்றில் தோற்றேன். திரும்ப வாராய். செல்க: வாழ்க!” என்று வாழ்த்துகின்றார்;