பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் குரு வும் சீடனும் 夏姆莎 அமைதியோடு வாழ்த்து நடைபெறுகின்றது. கண்ணனும் சென்று விடுகின்றான். கவிஞர் எ தி ப ர | த து நடைபெறுகின்றது. கண்ணன் எங்கிருந்தோ எழுதுகோல் பெற்றுத் திரும்பு கின்றான். கவிஞர் காட்டிய பகுதியை கவினுற வரை கின்றான். பின்னர், 'ஐயனே, அடியேன் தேவரீரி சொல் வழி நடப்பேன். தொழில் பல புரிவேன். அடியேனால் தேவரீருக்கு யாதொரு தீங்கும் எய்தாது” என்று உரைத்து நகைக்கின்றான்; திடீரென்று மறைந்து விடுகின்றான். அடுத்தக் கணத்தில் கவிஞரின் நெஞ்சில் தோன்றிப் பேககின்றான் : 'மகனே, ஒன்றை ஆக்கலும், மாற்று தலும், அழித்திடலும் நின்செயலன்று, தோற்றேன்" என்று உரைத்திடும்பொழுதே நீ வென்றவனாகின்றாய். உலகினில் நீ மேற்கொள்ளும் தொழி வெலாம் ஆசையும் தாபமும் அகற்றியே புரிவாய். வாழ்க நீ என்கின்றான். இந்தக் கவிதையால் நாம் அறிந்து கொள்வதென்ன? எல்லா நிலைக் கல்வியும் படிப்போனை மையமாக வைத்து நடைபெறுதல் வேண்டும் (Child centred). குருவித் தலை யில் பனங்காயை வைத்துக் கட்டுதல் கூடாது. மாணாக்கர் களின் உளப்போக்கை அறிந்து ஆசிரியர்கள் கற்பித்தல் வேண்டும். பெற்றோர்களும் தம் வழித் தோன்றல்கள் அவர்தம் திறமைக் கப்பாற்பட்ட கல்விபெறவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தல் கூடாது. பெற்றோரும் ஆசிரியரும் அரசும் மாணாக்கர்கள் கற்கும் சூழ்நிலையை உண்டாக்கல் வேண்டும்; உருவாக்குதல் வேண்டும்: விதையினுள் மறைந்திருக்கும் சிறுசெடி முளைத்து வளர் வதற்கு உழவன் பல்வேறு முறைகளை மேற்கொள்ளு கின்றான். எருவிடல், நீர்பாய்ச்சல், களை எடுத்தல், நோய் தொற்றாது மருந்து தெளித்தல் போன்ற செயல்