பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-11 கண்ணம்மா-என் குழந்தை குழந்தைச் செல்வத்தைப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். உலகமொழிகளிலுள்ள இலக்கியங்களி லெல்லாம் மக்கட் செல்வத்தைப் பற்றிய கவிதை களைக் காணலாம். இம்மை யுலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறுவின்று எய்துட செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர் பயந்த செம்ம லோர் எனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே பாகுதல்" இசை - புகழ், மறு கு ற் ற ம்: செறுநர் - பகைவர்; செம்மலோர் - தலைமையுடையவர்) என்று செல்லூர்க் கோசிகன் கண்ணனார் என்ற சங்கப் புலவர் கூறியுள்ளார். மக்களைப் பெற்றவர்க்கு இவ் வுலகிலும் புகழ் உண்டு; மறுமை யுலகின் வாழ்வையும் குற்றமின்றி எய்துவர் என்கின்றார். இது வழிவழியாக வரும் பழமொழி என்று கவிஞர் குறிப்பிடுவதிலிருந்து இக் கருத்து மக்களிடையே நிலவி வரும் கருத்தாகும் என்பதை யும் அறிகின்றோம்.