பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் குழந்தை } 63 காட்டுகின்றது பாடல். இத்தகைய நலம் சான்ற மக்களைப் பயவாதார்க்குத் தாம் வாழும் நாளில் முடிக்கக் கூடிய பொருளே இல்லை என்பது பாடல் உணர்த்தும் உண்மை. கலித்தொகையில் குழந்தை பின்பத்தைப்பற்றி ஒரு குறிப்பைக் காண்கின்றோம். பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வீட்டிற்கு வெளியில் (சிறைப்புறத்தில்) நிற்கின்றான். அப்போது தலைவி குழந்தையாக இருக்கும் தன் மகனுக்கு உரைக்கின்றாள்: கிளர்மணி ஆர்ப்பார்ப்பச் சாஅச் சாஅய்ச் செல்லுந் தளர்நடை காண்டல் இனிது...... 第 (கிளர்மணி - விளங்கு மணிகள்: சாஅய் = அசைந்து விளங்கின மணிகள் ஆரவாரிப்ப ஆரவாரிப்ப அசைந்து அசைந்து நடக்கும் தளர்ந்த நடையைக் கண்டு மகிழ்ந் திருத்தல் எமக்கு இனிதாக உள்ளது...” என்கின்றாள். ...காமறு நோக்கினை: அத்தத்தா என்னுநின் தேமொழி கேட்டல் (காமறு - விருப்பம் மருவுகின்ற; நோக்கு - அழகு) விருப்பம் மருவுகின்ற அழகினையுடையாய்! அத்தத்தா என்று மழலைமொழி பேசும் நினது இனிய மொழியைக் கேட்டு மகிழ்ந்திருத்தல் இனிது..." என்கின்றாள். 3. கலி.-80. (மருதக்கலி 15)