பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் குழந்தை 11 : என்ற பாசுரப் பகுதிகளில் இந்த அதுவத்தைக் கண்டு மகிழலாம், இங்கணமே புறம் புல்கல், அப் பூச்சி காட்டுதல் போன்ற கண்ணன் விளையாட்டுகளை அதுபவித்து மகிழ்கின்றான் யசோதைப் பிராட்டி, பெரியாழ்வார் தான் யசோதைப் பிராட்டியாக நின்று கண்ணனின் சிறு குறும்புகளையும் பிறவற்றையும் அநுபவிக்கின்றார். பாரதியோ பராசக்தியைக் கண்ணம்மா’ என்று பெண்குழந்தையாக்கிக் குழந்தையிடமே நேரில் பேசு கின்றார். சின்னஞ் சிறுகினியே-கண்ணம்மா! செல்வக் காஞ்சியமே என்று பாட்டினைத் தொடங்கும் போதே தாலாட்டுப் பாணியில் தொடங்குகின்றார். பாட்டின் ஒவ்வொரு அடியையும் சிந்தித்துப் பார்க்கும்போது உருக்காட்சி (imagery) புலப்படும். செல்வப் பிராணியாக வளர்க்கப் படும் கிளியை நினைந்து அதனோடு குழந்தையை ஒப்பிடு கின்றார். கட்டுப்பாடின்றித் திரியும் அழகிய கிளிக்குக் கட்டுப்பாடில்லாமல் இங்குமங்கும் ஒடும் அழகிய குழந்தை தாய்க்கு செல்வக்களஞ்சியமாகத் தென்படுகின்றது. இந்த இரண்டு ஆடிகளிலும் தாயின் கொஞ்சுதல் தென்படு கின்றது. அடுத்த இரண்டு அடிகள் அற்புதமானவை, என்னைக் கலிதீர்த்தே-உலகில் ஏற்றம் புரிய வந்தாய்! இவற்றில் குழந்தையைப் பெற்றெடுத்த தாயின் மட்டற்ற களிப்பு-பூரிப்பு-வெளிப்படையாகப் புலனாகின்றது, 5. பாட்டின் தலைப்பில் "பராசக்தியைக் குழந்தை யாகக் கண்டு சொல்லிய பாட்டு என்ற குறிப்பு உள்ளது,