பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் குழந்தை 置盟莎 குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேளாதவர்க் குத்தான் குழலொலியும் யாழ் ஓசையும் இனிமையாக இருக்கும் என்கின்றார். குழில்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளr ஆவர்.சி என்ப்து அவர் வாக்கு. மழலைச் சொல்வின் பயனைப் பாரதியார் புலப்படுத்துகின்றார். குழலும் பாழும் மனத் திற்கு அமைதி கொடுக்கவல்லவை என்பது வள்ளுவர் கருத்து. மழலைச்சொல்லோ அன்னையின் துன்பங்கள் அனைத்தையும் போக்குகின்றது; குழந்தையின் முல்லைச் சிசிப்பு மனோவிகாரத்தையும் அகற்றி விடுகின்றது’ என்பது பாரதியாரின் கணிப்பு. சொல்லும் மழலையிலே-கண்ணம்மா! துன்பங்கள் தீர்த்திடுவாய்; முல்லைச் சிரிப்பாலே-எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய். என்று இக்கருத்தைச் சொல்லோவியமாக்கிக் காட்டு கின்றார் கவிஞர். இப்படியெல்லாம் இன்பம் ஊட்டும் குழந்தை முகம் கோனினால் அன்னை அடையும் துன்பம் சொல்லி முடியாது. குழந்தையின் கண்ணில் நீர்வடித்தால் எந்தத் தாயும் அதனைக் கண்டு ஒரு நொடியும் சகிக்க மாட்டாள். அவளுடைய இதயம் வெடித்துக் குருதி வெள்ளமிட்டோடச் செய்யும். பாரதியாரின் சொல்லோ வியங்கள் இவற்றை விளக்குகின்றன. சற்றுன் முகம்சிவந்தால்-மனது சஞ்சல மாகுதடி: 8. மேலது - 66.