பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-12 கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை + .....-............ بی.-بس تھا. مم-، پہ مبادباء கண்ணன் சிறுவனாக இருக்கும்போதும், சற்று வளர்ந்து முன்-குமரப் பருவத்தை எட்டிய போதும் அவன் செய்த குறும்புகளை அளவிட்டு உரைத்தல் முடியாது. கண்ணனின் இத் திருவிளையாடல்கள் பாகவத புராணத்தின்மூலமும் பல்வேறு இதிகாச புராணங்களின் மூலமும் மக்களிடையே பரவியிருந்தன. ஆழ்வார்கள் பாசுரங்களும் இவற்றைக் குறிப்பிட்டுள்ளன. இந்தப் பாடல் பாரதியாரின் கருத்தில் முகிழ்த்ததற்கு இவை யெல்லாம் மூலங்களாக அமைந்திருத்தல் வேண்டும் என்று கருதலாம். குழந்தைப் பருவத்தில் விளையாட்டு ஒன்றுதான் அதற்கு இன்பம் அளிப்பது. இந்த இன்பத்தை உளவியல் விவரிக்கின்றது; விதிகளையும் வகுத்துக் காட்ட முயல் கின்றது. எல்லா நாட்டுக் கவிஞர்களும் தம் கவிதைகளில் படைத்துக் காட்டி இந்த இயல்பூக்கத்திற்கு அழியா நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர். கற்பனையூர் என்ற பாரதியாரின் கவிதையொன்றில் குழந்தைப் பருவத்தின் பெருமகிழ்ச்சி விளக்கப்படுகின்றது. குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம்காண்-அங்கு கோல்பந்து யாவிற்கும் உயிருண்டாம்