பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-ான் விளையாட்டுப்பிள்ளை I 3 திணி - செறிந்த, கயம் - பொய்கை, தைஇ - சூடி கைபிணைந்து கைகோத்து தழிஇ . தழுவி; தூங்கி -இசைந்து நணி அண்ணிதாக: கோடு - கொம்பு சீர் - அழகு மகுள வியப்ப; பிதிர திவலைஎழ; குட்டம் மடு: கல்லா இளமை - கல்வியில்லாத இளமை: அரிது இரக் கத்தக்கது) இப்பாடவில் மறையும் மாயமும் அறியாத இளையருடன் கூடி நீரில் பாவை வைத்து விளையாடியதும், நெடுநீரீக் குட்டத்தில் குதித்து ஆழ்ந்து சென்று மணல்கொண்டு வந்து காட்டி மகிழ்ந்ததுமான செயல்கள் விவரிக்கப் பட்டிருத்தலைக் கண்டு மகிழலாம். இந்த ஏக்கமே நம் உள் மனத்தைத் தூண்டுகின்றது: கழிந்துபோன நிலையின் பிரதிபிம்பங்களாகக் குழந்தைகளை தேசிக்கவும் செப் கின்றது, சாதாரண மனிதன் தான் காணநேரிடும் குழந்தை களை நேசித்துத் தன் ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளுகின் தான். கவிஞனோ இந்த நிலைக்கு அழியாத ஒர் உருவம் கொடுக்க விழைகின்றான். சாதாரணமாகத் தமிழ்நாட்டுக் கவிஞர்கள் குழத்தை முருகன், குழந்தை கண்ணன் இவர் களின் விளையாட்டுகளுக்கு அதிக இடம் கொடுத்துள்ள னர். பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் முருகன் சிறுகுறும் புகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. கண்ணனைப் பற்றிய சிறுகுறும்புகள் ஆழ்வார் பாசுரங்களில் அதிகமாகச் சித்திரிக்கப்பெற்றிருப்பதைக் காணலாம். சாதாரணப் பிள்ளைகள் விளையாட்டில் களைத்துப்போகும்; சில சமயம் அலுப்பும் சவிப்பும் அவர்களிடம் தோன்றுவதும் உண்டு. ஆனால் கண்ணனாகிய பிள்ளை சலிக்காமல் , களைப்படையாமல், மு டி வி ன் றி விளையாடுவதாகக்