பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

讀證露 கண்ணன் பாட்டுத்திறன் கவிஞர்கள் கற்பனை செய்துள்ளனர். தெய்வக்கூறுகளைக் கொண்ட பிள்னை இத்ததைய கற்பனைக்கு இடம் தருகின்றது. இலக்கியம் வாழ்க்கையினின்று மலர்வதாகச் செப்புகின்றனர் திறனாய்வாளர்கள். நாம் நம் பிள்ளைப் பிராயத்தில் சிறுமியரோடு விளையாடி மகிழ்ந்த காட்சி கனை தம் மனம் எண்ணிப் பார்க்கின்றது; அங்கணமே இக்கியங்களில் காணப்பெறும் கண்ணன் ஆப்ப்பாடியில் ஆயிச் சிறுமியருடன் சேர்ந்து விளையாடிக் களித்த காட்சிகளை தம் உள் மனம் காண்கின்றது. இந்த இரண்டு காட்சிகளை இணைத்தமை தெரியாவண்ணம் இணைத்து கலை உருவம் தத்து அவற்றிற்கு அழியா வாழ்வை அளித்து விடுகின் ஜான் கவிஞன். இத்தகைய கலைஉருவம் சமைப் பதித்து ஆழ்வார் பாசுரங்கள் பாரதியாகுக்குக் கை கொடுத்து உதவியுள்ளன என்று கருதலாம். தீராத விளயாட்டுப் பிள்ளை-கண்ணன் பெண்களுக் கோடாத தொல்லை. என்று பாடல் தொடங்குகின்றது. கண்ணனைப்பற்றி: காட்சியை இவ்வடிகள் நம் மனக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. பெரியாழ்வார் பாசுரங்களில் நாம் காணும் கண்ணன் அற்புதமானவன். சாதாரண நிகழ்ச்சி களையும் தெய்விக நிகழ்ச்சிகளையும் கலந்து காட்டுபவன். பாரதியார் காட்டும் கண்ணன் சாதாரணமானவன்; சாதாரணக் குறும்புச் செயல்களைப் புரிபவன்; ஆனால் இத் நிகழ்ச்சிகள் இதிகாசக் கண்ணனை நம் மனத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதிகாசக் கண்ணன் கன்றுகளுடன் செய்யும் விளை யாட்டைப் பாரதியார் காட்டும் பிள்ளைக் கண்ணன் சிறுமிகளுடன் காட்டுகின்றார்: