பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட் 帮引 தென்றிக் கெடும்." என்ற அடிகளில் கண்ணன் சில கட்டெறும்புகளைக் கன்று களின் காதில் இட்டு அதனால் அவை வெருண்டு ஓடு வதைக் கண்டு மகிழ்கின்றான். பாரதியாரின் கண்ணன் செய்யும் சிறு குறும்பைச் சிறுமிகளே முறையிடுகின்றனர். அங்காந் திருக்கும் வாய் தனிலே-கண்ணன் ஆதேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான் எங்காகி லும்பார்த்த துண்டோ?--கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கைவொன்றோ?* இத்தகைய குறும்பைப் பாரதிகாட்டுவது நகைச்சுவையின் மிகையைக் காண்பிக்கின்றது என்றும், இஃது இயற்கைச் சித்திரத்திற்கு முற்றும் மாறாக இருக்கின்றது என்றும், இத்தகைய கற்பனையைப் பாரதி பயன்படுத்தியிருக்கக் கூடாது என்றும் சில திறனாய்வாளர்கள் கருதுகின்றனர்." ஆனால், கவிஞனுக்குத் தனி உரிமம் உண்டு; அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். அதில் நாம் தலையிடு வதற்கில்லை. பாரதியார் நாம் சிறுவர்களிடம் காணாத ஒன்றைக் கண்ணனாகிய சிறுவன் புரிந்து மகிழ்வதைக் காட்டுகின்றார். கண்ணன் புரியும் சிறுகுறும்புகள் முடிவில் மகிழ்ச்சியை நல்குவனவாக இருப்பினும் மகளிரைப் படாதபாடு படுத்தி வி டு கி ன் றன. பெரியாழ்வாரின் கண்ணனைப்பற்றி ஆய்ச்சியர் குற்றப்பத்திரிக்கை வாசிக்கின்றனர். 3. பெரியாழ். திரு. 2 - 4:2. 4. தீராத விளையாட்டுப் பிள்ளை - 6. 5. கண்ணன் என் கவி-பக், 115,