பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎 薯證發 கண்ணன் பாட்டுத்திறன் ಫ್ತಿ ?? ! ೩.ಘೋಫಿ கொண்டேன் உனக்கு என்து பேசுகின்றாள். இங்குப் பல்வேறு வயது நிலைகளுக் கேற்றவாறு கண்ணன் செய்த தீம்புகளைக் காண்கின் றோம். ஆனால், பாரதியார் தீராத விளையாட்டு பிள்ளை இடம் காட்டுக் சிறு குறும்புகள் நாம் பிள்ளைப் பிராயத் தில் சிறுமியரோடு விளையாடி மகிழ்ந்த காட்சிகளை தினைவுக்குக் கொணர்கின்றன. சிறுமியர்க்குத் தின்னப் பழக்கொண்டு தருகின்றான். அவர்கள் தின்கின்ற சமயத் தில் தட்டிப் பறிக்கின்றான். என்னப்பன், என்னய்யன் என்று அவர்கள் புகழ்ந்து கெஞ்சிக் கேட்டால் எச்சிற் படுத்திக் கொடுக்கின்றான். தேனொத்த பண்டங்களைச் சிறுமியர்க்கு எட்டாத உயரத்தில் வைத்துவிட்டு அவர் களை நோக்கி மான் ஒத்த பெண்ணல்லவா? என்று கொஞ்சுவிசன். அவர்கள் மனம் மகிழ்த்துகொண்டிருக்கும் போதே அவர்களைக் கிள்ளி அழச்செய்து விடுவான். அழகுன்ன மலர்களைக் கொண்டுவந்து ஒரு சிறுமி விடம் தருகின்ருன்; அவனை அழவைத்த பின்னரே அதை அவளுக்குத் திருகின்றான். அவள் கண்ணை மூடிக்கொண் உால் அவளுக்குச் சூட்டுவதாகச் சொல்லுகின்றான். ஆனால் அவள் கண்ணை மூடிக்கொண்ட பிறகு அவளுடைய தோழிபொருத்திக்குச் சூட்டிவிடுகின்றான். இன்னும் சில குறும்புகள் : & பின்னலைப் பின்னின் றிழுப்பான்;-தலை பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வண்ணப் புதுச்சேலை தனிலே-புழுதி வாசிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்