பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் விளையாட்டுப்பிள்ளை f o f புல்லாங் குழல்கொண்டு வருவான்:-அமுது பொங்கித் ததும்புதற் கீதம்ப டிப்பான்; கண்ணால் மயங்குவது போவே-அதைக் கண்மூடி வாய்திறத் தேகேட் டிருப்பான். இன்னும் என்னென்ன செய்வான் தெரியுமா? சொல்லுகின்றாள் ஒரு பெண்: "எங்களை விளையாட வருமாறு அழைப்பான். வீட்டில் ஏதாவது பணி செய்யு மாறு ஏவினால் அதைக் காதில் போட்டுக்கொள்வதே இல்லை. வேறு ஆண்பிள்ளைகளுடன் ஆடிக் குதிப்பான்; எம் விளையாட்டிடையில் பிரிந்து போய் விடுவான். வீட்டிற்குச் சென்று எங்களைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வான். கோளுக்கு மிகவும் சமர்த்தன்;-பொய்ம்மை குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில் அத்தனைப் பெண்களையும் ஆகா தடிப்பான்; "ஆனால் இல்லத்தில் அன்னைக்கும் நல்லவன்: அத்தைக்கும் நல்லவன்; தந்தைக்கும் அப்படியே. எம்மைத் துயர் செய்யும் கண்ணன் வீட்டிலுள்ளோர் அனைவர்க்கும் நல்லவன்போல் நடந்து கொள்வான்' என்கின்றாள். இத்தனை 'சேஷ்டிதங்களும்' கே. ட் ப த ற் கு நன்றாகத்தானிருக்கின்றன. நாம் இவற்றைக் கேட்டு மகிழ்கின்றோம்; சிரிக்கின்றோம்; இந்த நிகழ்ச்சிகளைப் பால்வேற்றுமையின்றி அனைவருமே அது ப வி த் து மகிழ்கின்றனர், கலப்பற்ற நகைச் சுவையின் சிறந்த கூறுகளைக் கொண்டுள்ளன. இச் செயல்கள். இவை "தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை" தருபவை