பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-13 கண்ணன்-என் காதலன் காம உணர்ச்சி, அஃதாவது இன்ப உணர்ச்சி, பருவம் திரம்பிய உயர்த்திணை அஃறிணை உயிர்க்கெல்லாம் பொதுவாய் அமைந்து கிடப்பது. எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான்அமர்ந்து உரூஉம் மேவற் றாகும்." என்று ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியர் சுட்டி யுள்ளவாறு பிறவியிலேயே உடம்போடு ஒட்டிய இயல் புடையது. இத்தகைய இன்ப உ ண |ர் ைவகாமத்துடிப்ப்ை-நெறிப்படுத்தி அகத்திணை என்று இலக்கியமாக்கி வரம்பு கட்டிய பெருமை பண்டைத் தமிழ்ச் சான்றோர்களைச் சாரும். உலக இலக்கியங்களெல்லாம் காதல் உணர்வு அமைந்திருப்பினும் தமிழ் இலக்கியத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்புடையது. ஒரு தனி மனித னுடைய காதலை மன்பதைக்குரிய .ெ ப ா து ப் பொருளாக்கித் தூய்மைப் படுத்திய பெருமை தமிழர் களின் தனிச்சிறப்பாகும். இங்ங்ணம் இறைவன் படைப்பின் இருபெருஞ்சின்னங் களாகிய ஆண் பெண் இரண்டையும் ஒன்றாகப் பிணைத்து இறைவனின் அன்புநிலையுடன் ஒப்பிட்டுக் காட்டிய பெருமை பக்தி இலக்கிய காலத்தில் தோன்றிய 1. தொல். பொருள். பொருளியல் - 27, ès. Lirf, -9