பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置密夺 கண்ணன் பாட்டுத்திறன் சமயகுரவர்களின் பெரும் சிறப்பாகும். சங்கச்சான்றோர் களின் பாடல்களில் தூய்மைப்படுத்தப்பெற்ற இந்த உணர்ச்சி ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்தில் மேலும் தூய்மை அடைந்தது. சம்பந்தஞானத்தைப்பற்றி முன்னர்க் குறிப்பிட்டேன் அல்லவா? சீவான்மாவுக்கும் பரமான்மாவுக்கும் உள்ள உறவு நாயகி-நாயகன் (தலைவி-தலைவன்) உறவுபற்றிக் குறிப்பிட்டதை ஈண்டு நினைவு கூர்க. வேதாந்தங்களில் குறிப்பிடப்பெறும் பக்தி ஆழ்வார்கள்போன்ற ஞானச் செல்வர்களிடம் காதல் முறையில் பரிணமித்து நிற்கும். எம்பெருமான்மீது கொள்ளும் காமம் பகவத் விஷயகாமம் என்று வழங்கப் பெறும். இங்ங்ணம் மாதவன்மீது அவர்கள் கொள்ளும் காமம் மங்கையர்மீது கொள்ளும் காமத்தினின்றும் வேறு பட்டது. ஆயினும், சிற்றின்ப அநுபவமாகிய காதலுக்குக் கூறப்பெறும் அகப்பொருள் துறைகள் யாவும்.இந்த பகவத் விஷயகாமத்திற்கு’க் கூறப்பெறும் சிற்றின்ப அநுபவத் திற்குக் கொங்கை முதலியன சாதனமாயிருப்பதுபோல, பகவத்விஷயா நுபவத்திற்குப் பரபக்தி பரஞானம் பரம பக்தி' இவை இன்றியமையாதனவாக இருப்பதால் 2. பரபக்தி என்பது, எம்பெருமானை நேரில் காண வேண்டும் என்ற ஆவல். பொய்கையாழ்வார் இந் நிலையை அடைந்தவர். 3. பரஞானம் என்பது, எம்பெருமானை நேரில் காணல். பூதத்தாழ்வார் இந்நிலையை அடைந்தவர். 4. பரமபக்தி என்பது, எம்பெருமானை இடையறாது அநுபவிக்க வேண்டும் என்ற ஆவல். இந்நிலையை எய்தியவர் பேயாழ்வார். இவற்றின் விளக்கத்தை இவ்வாசிரியரின் முத்திநெறி (பாரி நிலையம், சென்னை - 600 001) என்ற நூலில் பக். 100-104 கண்டு தெளிக;