பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் 盟器置 அவையே கொங்கை முதலான சொற்களால் இவ்வாழ்வாரி களின் அருளிச் செயல்களில் கூறப்பெறுகின்றன என்று ஆன்றோர் கொள்வர். இந்த அநுபவத்தின் அடிப்படையில் பாரதியாரின் 'கண்ணன்-என் காதலன்', 'கண்ணம்மா-என் காதலி' என்ற தலைப்பின்கீழ் உள்ள பாடல்களை ஆய்தல் வேண்டும். முதல் வகையில் ஐந்து பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதற் பாடல் : தலைவி (இங்குக் கவிஞர்) தன் பிரிவாற்றாமையைத் தோழியிடம் கூறுவதையும், கனவில் கண்ட உருவம் கண்ணனாக இருந்தமையைக் கூறுவதை யும் உரைப்பது. பாரதியார் ஆழ்வார் பாசுரங்களின் மரபையொட்டி இப்பாடலை அமைத்தாலும் பாடல் தனித்தன்மைபெற்றுப் பாரதியின் முத்திரை’யைக்காட்டு கின்றது. பாரதியார் காதலி நிலையில் இருந்துகொண்டு கணவன் பிரிவினை (காதலன் பிரிவினை)த் தம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தோழியிடம் பேசுகின்றார். எடுத்த எடுப்பில், தூண்டிற் புழுவினைப் போல்-வெளியே சுடர்வி ளக்கி'னைப்போல், நீண்ட பொழு தாக-எனது நெஞ்சம் துடித்ததடி! கூண்டுக் கிளியி னைப்போல்-தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்; 5. பிரிவாற்றாமை-துணைவர்கள் ஒருவரையொருவர் பிரித்து இருத்தலைச் சகியாமைப்பற்றிக் கூறுவதாக அமைவது இத்துறை விளக்கம்: அ. க த் தி ைண க் கொள்கைகள்-பக் (615 - 16) காண்க.)