பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧惑罗 கண்ணன் பாட்டுத்திறன் . வேண்டும் பொருளை எல்லாம்-மனது வெறுத்து விட்டதடி! என்று கண்ணனின் பிரிவால் தமது ஆற்றாமையைஉள்ளக்குமுறலை-வெளியிடுகின்றார். த ைல வ ைன ப் பிரிந்ததனால் தலைவி (இங்குக் கவிஞர்) தூண்டிலில் மாட்டிக்கொண்ட புழுவினைப்போலும், காற்று அலை மோதுதலால் விளக்கு ஆடி அண்ையும் போக்கைகாட்டு வது போலும், கூண்டில் அடைப்பட்ட கிளியினைப் போலும் துன்பப்படுவதாகக் கூறுகின்றாள். தலைவி தனியாகப் பாயில் படுத்திருக்கும்போது அன்புக்கு உறைவிடமான அன்னை அருகில் வந்தாலும் அவளுக்குச் ச லி ப் பு தா ன் ஏற்படுகின்றதென்றும், தனக்கு ஏற்பட்ட 'நோய் நாடி, நோயின் குணம் நாடி, அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்யாமல் அவர் கள் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் பிதற்றுவதை அவள் விரும்பவில்லை என்பதைத் தெரிவிக்கின்றாள். 'ஊணிலும் நாட்டம் இல்லை; உறக்கமும் கொள்ள முடிய வில்லை; மலரின் மணமும் அவள் மனத்தை ஈர்க்கவில்லை. எதிலும் மனம் ஈடுபடாமல் ஒரே குழப்பம். ஒருக் கணமாயினும் சுகம் காணக்கிடைத்ததில்லை"என்று தன் நிலையை எடுத்துக் கூறுகின்றாள். பிரிவாற்ற முடியாத நிலையிலுள்ள சங்ககாலத் தலைவியரின் நிலையும் இதுதான். ஆனால் நேராகச் சங்க இலக்கியங் களின் தாக்கம் இவர் பாடல்களில் இருப்பதாகச் சொல்லப் போதுமான சான்றுகள் இல்லை. ஆனால் சங்க நூல்களை ஆழ்ந்து பயின்று பாசுரங்கள் அருளிச் செய்த ஆழ்வார் பிரபந்தங்களின் தாக்கம் இப்பாடல்களில் தெளிவாகப் 6. குறள்-948.