பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் 慧3岛 புலனாகின்றது. மேலே தலைவியே கூறியனவாகவுள்ள செய்திகள் ஆழ்வார் பாசுரங்களில் தாயின் கூற்றாக வருகின்றன. உண்ணும் நாள் இல்லை உறக்கமும் தான் இல்லை கண்ணன்ஊர் கண்ணபுரம் தொழும்...? என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தைக் கண்டு இதனைத் தெளிக. குணம் உறுதியில்லை;-எதிலும் குழப்பம் வந்ததடி! என்ற பாரதியாரின் பாடல் அடியிலுள்ள கருத்து திருமங்கையாழ்வாரின், தாய்வாயில் சொல்கேளாள்; தன் ஆயத் தோடு அணையாள்; தடமென் கொங்கை யே ஆரச் சாந்தணியாள்." பூண்முலைமேல் சாந்தணியாள்: பொருகயல்கண் மைஎழுதாள்; பூவை பேனாள் ஏண் அறியாள் எத்தனையும்." (ஏண் அறியாள் - நெஞ்சால் நினைக்கின் றாள் இல்லை) என்ற பாசுர அடிகளிலுள்ள செயற்படாத் தன்மையை விளக்குவதாகக் கருதலாம். மேலும் பாரதியார், ஆடிஆடி அகம்க ரைந்திசை பாடிப் பாடி கண்ணிர் மல்கிஎங்கும் 8 மேலது. 5. 3:4 . 9, மேலது 5, 3:5