பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓝荔4 கண்ணன் பாட்டுத்திறன் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ்வாள் நுதலே." என்ற நம்மாழ்வார் பாசுரக் கருத்தையும், உள்ளம், மலங்க வெள்உயிர்க்கும்." பட்டபோது எழுபோது அறியாள்; விரை மட்டும்.அலர் தண்துளாய் என்னும்." என்ற பாசுர அடிகளிலுள்ள கருத்தையும் அடிப்படை யாகக் கொண்டுத் தம் பாடலை அமைத்துள்ளார் என்று கருதவும் இடம் உண்டு. இவையும் தாய் கூற்றுகளாகவே அமைந்தவையாகும். இன்னும் திருவாய்மொழியிலுள்ள தன்மகள் பொருட்டுத் தாய் இரங்குவதாகவுள்ள பாசுரங்கள் யாவும் பாரதியாரின் இப் பாடலுக்குக் கைகொடுத்து உதவியுள்ளன என்று கருதலாம், இன்னும் பாரதி நாயகி பேசுகின்றாள் : பாலுங் கசந்த தடி!-சகியே படுக்கை நொத்ததடி! கோலக் கிளிமொழியும்--செவியில் குத்தல் எடுத்த தடீ! நாலு வயித்தியரும்-இனிமேல் நம்புதற் கில்லை யென்றார்: பாலத்து சோசியனும்-கிரகம் படுத்தும் என்று விட்டான். 10. திருவாய் 2, 4: 1 11. மேலது 2, 4:4 12. மேலது 2. 4:9 13. நாயகி நிலையை ஏறிட்டுக்கொண்டு பேசும் கவிஞர் பாரதி, பரகாலநாயகி, பராங்குச நாயகி என்று வருவனபோல.