பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் 麓35 பிரிவாற்றாமையால் பாலும் கசக்கின்றது. படுக்கையும் கொள்ள இடம் தரவில்லை; மருத்துவரும் இவள் பிழைப்பாள் என்ற நம்பிக்கை தெரிவிக்கவில்லை; புகழ்வாய்ந்த பாலம் என்ற ஊரிலுள்ள சோதிடனும் இவள் நிலைக்குக் கா ர ைம் கிரக நிலைதான் என்கின்றான். பாரதி நாயகி கனவு காண்கின்றாள். கண்ணுக்குப் புலனாகாத ஒருவன் இவள் அகத்தைத் தொட்டுவிடு கின்றான். அவன் தன் திருமேனியை மறைத்துவிடு கின்றான். எனினும், இவள் மனம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றது. பேசுகின்றாள் நாயகி : உச்சி குளிர்ந்த தடி!-சகியே! உடம்பு நேராச்சு மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல் மனத்துக் கொத்ததடி! இச்சை பிறந்த தடி!-எதிலும் இன்பம் விரைந்த தடீ! அச்சமொழிந்த தடி!-சகியே! அழகு வந்த தடீ. தன் முன்னைய நிலை எய்தி கிளிப்பெருக்குடன் உள்ள தலைவியை இங்குக் காண்கின்றோம். நல்ல விருந்து உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட பின்னர் ஒருநாள் அவ்விருந்துபற்றி நினைந்து பேசும் போது அதிக மகிழ்ச்சி ஏற்படுவதை ஒவ்வொருவரும் அநுபவத்தால் ஆறியலாம். பாரதி நாயகியும் தான் கனவில் கண்ட உருவத்தையும் அவன்தன்னைத் தொட்ட இடத்தையும் எண்ணி எண்ணிப் பார்க்கின்றாள். கனவில் வந்தவன் கண்ணன் என்றே அறிகின்றாள். இக்கருத் தினை நுவலும்,