பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் 1.37 கடிசேர் கண் எனில் பெருமானே! என்று என்று ஏங்கி அழுதக்கால் படிசேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால்தோளும் துடிசேர் இடையும் அமைந்ததுஓர் தூநீர் முகில்போல் தோன்றாயே.." என்ற திருவாய்மொழிப் பாசுரத்திலும் இத்துடிப்பினைக் காணலாம், இந்தப் போக்கில் பாரதியாரும் இந்த ஞானச் செல்வர்கள் கூட்டத்தில் சேர்ந்து விடுகின்றார், இந்தப் பாடலின் தலைப்பில் சிருங்கார ரசம்' என்ற குறிப்பு காணப்பெறுகின்றது. இந்த ரசத்தைப்பற்றிய தெளிவு ஏற்பட்டால் பாடலின் சுவை ப்டிப்போரிடையே எழுவதற்கும், அஃது அவர்களின் அநுபவமாதற்கும் ஏதுவாகும். வடமொழிப் புலவர்கள் சிருங்காரத்தை முதல் ரசமாகக் குறிப்பிட்டுள்ளனர். காதல் இல்லாமல் கதை உண்டா? என்ற கேள்வி நம்மிடையே உலவுகின்ற தன்றோ? இதற்கு மூல காரணம் இலக்கியங்களில் அதிக மாக உவகைச் சுவை மட்டுமீறி இருப்பதுதான். தமிழ் இலக்கியத்திலும் இதே நிலைதான். இதனால் சில மேதாவிகள் ஆங்கில இலக்கியங்களை மட்டிலும் படித்து விட்டு-இன்னும் சிலர் எதனையும் படிக்காமல்-இவர்கள் 'நெருப்பு என்றாலே வாய் வெந்துவிடும் என்று கருதும் அதி மேதாவிகள்-நமது இலக்கியங்களில் சிருங்காரம் ஒன்றே அதிகமாகத் தென்படுவதையும் அவற்றில் உள்ள "பச்சையான வருணனைகளையும் கண்டு அவ்விலக்கியங் களை அதிகமாக இகழ்கின்றனர்." 18. மேலது. 8.5:3 17. யார் என்று திட்டமாகக் குறிப்பிட முடியவில்லை. 'தமிழறியாத் துரைகள்' என்று சொல்லிவைக்கலாம்.