பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

焉8 கண்ணன் பாட்டுத்திறன் வடமொழி வாணர்கள் சிருங்காரத்தைச் சம்போக சிருங்காரம் (காதலன் காதலி சேர்ந்திருக்கும்போது ஏற்படும் நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பது) என்றும், விப்ரலம்ப சிருங்காரம் (காதலன் காதலி பிரிந்திருக்கும் நிகழ்ச்சி களைச் சித்திரிப்பது) என்றும் இருபிரிவாகப் பிரித்துப் பேகவர். காதலியைக் கண்டு உள்ளம் பூரிக்கும்பொழுது அவளை அணுகித் தழுவுவது ஒரு மனநிலை; அப்பொழுது மனத்தை ஒருபுறமாய் நிறுத்தித் தன் காதலியின் அழகிய செயல்களையும் இனிய சொற்களையும் கண்டு மகிழ்வது அதிலும் மேலான மன நிலை. இதனையே சுவைஞர்கள் உயர்ந்ததென ஒப்புக்கொள்வர். இந்த இரண்டு வகையும் சேர்க்கையுள் அடங்கும் சம்போக சிருங்காரம் ஆகும். அம்போக சிருங்காரத்தைவிட விப்ரலம்ப சிருங்காரமே உயர்வு பெற்று விளங்கும். சிருங்காரத்தைப் பிரிவில் வருணிப்பதிலேயே கவிஞர்கள் அதிக மகிழ்ச்சி அடைவர். தலைவன் தலைவியருக்குச் சினத்தாலும், வேற்று நாட்டிற்குச் சென்றதாலும், சாபத்தாலும் மணந்து கொள்வதற்கு முன் நிகழும் இடையூறுகளாலேயே பலவிதங் களில் பிரிவு நிகழலாம். ஒவ்வொன்றையும் கவிஞர்கள் வாய்ப்பு கிடைத்தபொழுது விரிவாகக் கேட்போர் இன்புறத்தக்க முறையில் சித்திரித்துள்ளனர் வடமொழிப் புலவர்கள். தமிழ் இலக்கியத்திலும் புணர்ச்சி நிலையைக் குறிப்பிடும் குறிஞ்சி, முல்லைத் தினைகளைவிடப் பிரிவினைத் தெரிவிக்கும் பாலைத் திணையும், ஏதோ ஒருவகையில் பிரிவினையே காட்டும் நெய்தலும் மருதமும் அதிக இன்பம் பயப்பதை நாம் நன்றாக அறிவோம். இங்குக் காணும் பாரதியாரின் பாடல் பிரிவு நி ைல ைய ேய சித்திரிக்கின்றது. பாரதி நாயகி தன்னுடைய பிரிவு நிலையை அற்புதமாகப் புலப்ப்டுத்து