பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் 贾岛母 கின்றாள். கனவில் கண்ட காதலன் மறைத்துவிட்ட போதிலும், அவள் மனத்தில் தன் பிரிவினால் புதியதோரி மகிழ்ச்சியை விளைவித்து விடுகின்றான். தான் பெற்ற அந்த மகிழ்ச்சியை இன்ப உணர்ச்சியைத்-தன் தோழிக்கு அற்புதமாகச் சித்திரித்துக் காட்டுகின்றாள் : உச்சி குளிர்ந்ததடி!-சகியே உடம்பு நேராச்சு, மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல் மனத்துக் கொத்ததடி! இச்சை பிறந்ததடி!-எதிலும் இன்பம் விளைந்ததe: அச்சம் ஒழிந்த தடி!-சகியே அழகு வந்ததடி! என்ற கவிதைப் பகுதியில் நாயகியின் இன்ப உணர்ச்சி கொடுமுடியை எட்டுவதைக் கண்டு மகிழலாம். கவிதையை அநுபவிக்கும் நம்மையும் அந்த உயர் நிலைக்குக் கொண்டுசெலுத்துவதையும் உணரலாம். இரண்டாம் பாடல் : அது நள்ளிரவு. பாரதி நாயகி உறக்கமின்றித் தவிக்கின்றாள். அவளது தோழிமார் கள்வர்களும் உறங்கிவிடும் நள்ளிரவில்-கும்மிருட்டில்கும்மாளம் அடிக்கின்றனர்; புழுதி பறக்கும் அளவுக்குக் 'கூத்து நடைபெறுகின்றது. நாயகி பேசுகின்றாள் : "தோழியரே, என்ன நினைத்து இந்தக் கும்மாளம்? உறங்கும் ஊரையே எழுப்பிவிடுவீர்கள் போலிருக்கின்றது. உங்கள் ஆட்டத்தாலும் பாட்டாலும் நம் வீட்டில் 'ஆன்னை என்ற ஒரு மூதாட்டி இருப்பதுகூட உங்கட்கு நினைவு இல்லை போலும்! நீங்கள் பேசும் நொள்ளைக் கதைகள் யாவும் சாரம் கொண்டவை என்று சரடு' விடுகின்றீர்கள். உங்கள் ஆரட்டைக் கச்சேரி எனக்கு