பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置强碧 கண்ணன் பாட்டுத்திறன் ஒரே சலிப்பினைத் தருகின்றது. ஒரே அறுவை நானும் பல தினங்கள் பொறுத்துப் பொறுத்துப்பார்த்தேன். நீங்கள் போடும் கூச்சல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது" என்று தன் அருவருப்பைக் காட்டு கின்றாள்; வெறுப்பினைப் புலப்படுத்துகின்றாள். சகிப் பெண்களே. யாரோ கூணன் ஒருவன் சடையை இழுத்ததால் கொண்டை மலர்கள் சிதறிப் போயின என்றும், மதம் பிடித்த யானையொன்று வஞ்சியம்மையின் அருகினில் ஒடும்போது இவள் மூர்ச்சையுற்றாள் என்றும்; பானையிலுள்ள வெண்ணெய் முழுவதையும் யாரோ (கண்ணன்?) தின்று விட்டதால் பாங்கி உரோகிணி நோயுற் நாள் என்றும்; பத்திணிப் பெண்ணொருத்தியை வயல் வெளியில் பத்துச் சிறுவர்கள் வந்து முத்தமிட்டார்கள் என்றும் யாரோ ஒரு பெண்ணுக்கு நாற்பது அரசர்கள் திருமணம் புரிந்து கொள்வதாகச் சோதிடன் இட்டுக் கட்டிய கதையும்; கொத்துக் கனல்வழியக் கோவினிப் பெண்ணைக் கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்ததும் வித்தைப் பெயருடைய வினி யவளும் மேற்குத் திசைமொழிகள் கற்று வந்ததும் யாருக்கு வேண்டும்? எத்தனைப் பொய்கள்? என்ன கதைகள்!' என்று சொல்வி முகத்தைக் காட்டுகின்றாள்.' 'உங்கள் அரட்டைக் கச்சேரியும், வம்பர் மாநாடும் என்னை உறக்கமின்றி இன்னல் செய்கின்றன. உங்கள் கடையைக் கட்டுங்கள்” என்று சீறி விழுகின்றாள். அவள் விடுக்கும் ஆணை : சத்தமிடும் குழல்கள் வீணைக ளெல்லாம் தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே