பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் I-4 I மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர் நித்திரை கொள்ளளனைத் தனியில் விட்டே நீங்களெல் லோருமுங்கள் வீடுசெல்லுவீர்! என்பது. தான் குறியிடம் ஏகவேண்டியிருப்பதால் துடிப்புடன் இருக்கும் பாரதி நாயகி கடையைக் கட்டிக் கொண்டு அனைவரையும் கம்பிநீட்டவைக்கின்றாள். ஐந்தினையொழுக்கத்தில் தோழியின் உதவியால் காதலர்கள் சந்திக்கும் இடம் குறியிடம் என்று வழங்கப் பெறும். அது யகற்குறி’, இரவுக்குறி என இருவகைப் படும். இதனைத் தொல்காப்பியர், குறியெனப் படுவது இரவிலும் பகலிலும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப." என்று கூறுவர். பகற்குறி என்பது பகலில் சந்திக்கும் இடம்: இரவுக்குறியென்பது இரவில் சந்திக்கும் இடம். இந்தக் குறி யிடங்கள் தலைவியாலும் தோழியாலும் குறிப்பிடப் பெற்று அவ்வவ்விடங்களில் தலைவன் பகலிலும் இரவிலும் சந்திப்பான். களவு நீட்டிக்க வேண்டும் என்பதும், காதலா யினார் இருவகைக் குறிகள் நிகழ்த்த வேண்டும் என்பதும் அகத்திணையின் நோக்கம் இல்லை. பாலதாணையால் தாமே கண்டு தம் முட் புணர்ந்த களவுக் காதலர்கள் வெளிப்படையாக மணந்து இல்லறம் நடத்தவேண்டும் என்பதே அதன் நோக்கம். இந்த நோக்கம் நிறை வேறத் தக்க காலம் வாயாவிடின் களவு நீடிக்கும், களவு நீளுங்காலத்தில் பகற்புணர்ச்சிகள் இரவுப்புணர்ச்சி கள் நடைபெறும். இவற்றிற்கெல்லாம் வரையறைகள் உண்டு. விவரங்களை உரிய நூலில் கண்டு தெளிக.19 18. களவியல்-40 (இளம்) 19. அகத்திணைக் கொள்கைகள்-பக் (88.94)