பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#43 கண்ணன் பாட்டுத்திறன் ஈண்டுப் பாரதி நாயகி இரவுக் குறிப்ோக எண்ணுகின் றாள். பாங்கியர் போனபின்பு தனியிருந்து பேசுவது: கண்கள் உறங்கவொரு காரணமுண்டோ? கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே? பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார் பிரியமிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்; வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலிப் புறத்திலெனைக் கானடியென்றான்; கண்கள் உறங்கலெனும் காரிய முண்டோ? கண்ணனைக் கையிரண்டுங் கட்டலின்றியே? எப்படியும் அன்றிரவு-இரவுக் குறியில்-கண்ணனைச் சந்தித்து விடவேண்டும் என்ற துடிப்பு இப்பேச்சில் புலனாகின்றது. இங்குப் புணர்ச்சிக் குறிப்பு இல்லை. சந்தித்து அவன் கையைக் கட்டித் தொடுவதால் ஊற்றின்பம் பெறுதல் வேண்டும் என்ற துடிப்புதான் தெரி கின்றது. இவ்விடத்தில் அநுமன் சீதைக்குக் கூறும் அடை யாளங்களைக் கூறும் வகையில் அமைந்த பெரியாழ்வார் பாசுரத்தின், எல்லியம்போது இனித்திருத்தல் இருந்தது.ஒர் இடவகையில் மல்லிகைமா மாலைகொண்டு அங்கு ஆர்த்ததும்ஒர் அடையாளம்.' என்ற அடிகளையும் நாம் நினைவுகூர்ந்து மகிழ்கின்றோம். காதலிமார் காதலன்மார்களின் கைகளைக் கட்டி மகிழ் வார்கள் என்ற குறிப்பினை நாமும் அறிந்து மகிழ்கின் றோம். 20. பெரியாழ். திரு. 3. 10:2