பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் 143 இந்தப் பாடலின் தலைப்பில் உறக்கமும் விழிப்பும்’ என்ற தொடர் காணப்பெறுகின்றது. நாயகியின் உறங்க வேண்டும் என்று சொல்லும் பாசாங்கும் உறங்காமல் கண்ணனைக் குறியிடத்தில் சந்திக்க வேண்டும் என்ற திட்டமும் உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியை விளைவிக் கின்றன. சிருங்காரச் சுவை நம் மனத்தில் தட்டுப்படு கின்றது; அதனை அநுபவித்து மகிழ்கின்றோம். மூன்றாம் பாடல் : இப்பாடல் நாயகி நாயகனைத் 'திக்குத் தெரியாத காட்டில் (மிகவும் நெருங்கியிருக்கும் அடவியில்) தேடுவதாக அமைந்துள்ளது. தலைவி சோர்ந்து நிற்கும் தருணத்தில் கொலை வேடன் ஒருவன் இவள்மீது காதல் கொண்டு வெட்கம் கொண்டொழிய விழித்து, பெண்ணே உனதழகைக் கண்டு-மனம் பித்தம் கொள்ளுது. என்று நகைக்கின்றான். சில காதற்பேச்சுகளையும் பேசு கின்றான். நாயகி தான் மணந்துகொண்ட பெண் என்று கூறி தன்னைக் கண்ணால் பார்த்திடவும் தகாது என உரைக்கின்றாள். அவனோ விடாக்கண்டன்: தன்னிடம் வலிந்து இன்பம் பெற நினைக்கின்றான் என்பதை அறிகின்றாள் நாயகி. அட கண்ணா என்று அலறி விழவும், அவள் போதம் தெளிகின்றது. கண்ணனைக் கண்ணால் காண்கின்றாள். கண்ணா! வேடனெங்கு போனான்-உனைக் கண்டே அலறிவிழுந் தானோ?-மணி வண்ணா! எனதடயக் குரலில்-எனை வாழ்விக்க வந்தஅருள் வாழி! என்று நாயகியின் வாழ்த்துரையுடன் இக்கவிதை நிறைவு பெறுகின்றது.