பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i f 4. கண்ணன் பாட்டுத்திறன் இந்தப் பாடலில் பாரதியின் இயற்கைமீது கொன் டுள்ள ஆர்வம் தெரிகின்றது; ஆராக்காதல் தெளிவா கின்றது. இப்பண்பில் ஆங்கிலக் கவிஞராகிய வொர்ட்ஸ் வொர்த்துடன் சேர்ந்து விடுகின்றார். பாரதி நாயகி காட்டும் அடவியின் சொல்லோவியம் இது : மிக்க நலமுடைய மரங்கள்-பல விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு பாடி நகர்ந்துவரும் நதிகள்,-ஒ (திக்குதல்) நெஞ்சிற் கனல் மணக்கும் பூக்கள்,-எங்கும் நீளக் கிடக்குமிலைக் கடல்கள்-மதி வஞ்சித்திடும் அகழிச் சுனைகள்-முட்கள் மண்டித் துயர்கொடுக்கும் புதர்க்கள்-ஒரு (திக்குத்} ஆசை பெறவிழிக்கும் மான்கள்.-உள்ளம் அஞ்சக் குரல் பழகும் புலிகள்,-நல்ல தேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு, -ஒரு (திக்குத்} தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் அதன் சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன் முன்னின் றோடுமிள மான்கள்-அவை முட்டா தயல்பதுங்குந் தவளை. இதில் கவிஞன் இயற்கை அழகு நிலை ஒவ்வொன்றிலும் ஒரு கவிதையைப் பார்க்கின்றான். ஒரு நதி பாடிக் கொண்டே நகர்ந்துவரும் காட்சி அவனுடைய உணர்ச்சி யில் உற்பத்தியாவது சிறிதும் வியப்பில்லை. காட்சியின் கற்றுணர்ச்சியும் இத் த ைக ய கற்பனைக்கு இடம் தருகின்றது. கனல் மணக்கும் பூக்கள், இலைக்கடல்கள், வஞ்சித்திடும் அகழிச் சுனைகள், முட்கள் மண்டித் துயர்