பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் 145 கொடுக்கும் புதர்கள், ஆசைபெற விழிக்கும் மான்கள், உள்ளம் ஆஞ்சக் குரல் பழகும் புலிகள், நேசக்கவிதை சொல்லும் பறவை நீண்டு படுத்திருக்கும் பாம்பு, தன் னிச்சை கொண்டலையும் சிங்கம் போன்ற சொற்றொடர் கள் பல்வேறு உருக்காட்சிகளை (imagery) எழுப்பிக் கவிதையின் கவினை உயர்த்துகின்றது. பாரதி நாயகி இவற்றையெல்லாம் துய்க்கும் நிலையில் திக்குத்தெரியாத காட்டில் தன் காதலனைத் தேடி இளைத்துப் போகின் றாள்; சோர்ந்து விழும் நிலையில்தான் வேடனைப்பற்றிய நிகழ்ச்சி வருகின்றது; காதலனாகிய கண்ணனின் தரிசனமும் கிடைக்கின்றது. கவிதையின் தலைப்பில் பயாநகம், அற்புதம் என்ற ரசக் குறிப்பு உள்ளது. இக்குறிப்பினைப்பற்றி சில சொற் கள். பயம் மாந்தர்களுக்கு உடன் பிறந்த சொத்து. பயம் என்ற உணர்ச்சியற்றவர்கள் இல்லை என்றே சொல்லலாம். பயத்தை உண்டாக்கும் பொருள்கள் வேறுபடலாம்; பய உணர்ச்சி மட்டிலும் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், இவ்வளவு பழக்கமான உணர்ச்சியாக இருந்த போதிலும் பயத்தை ஒர் இலக்கியத்திற்கு முக்கிய ரசமாகக் கவிஞர்கள் விவரிக்கவில்லை. ஆயினும், ஒரு சில இடங் களில் இந்த ரசம் சிறப்பாகவே சித்திரிக்கப்பெற்றுள்ளது. பாரதத்தில் விராடன் மகன் உத்தர குமாரன் இந்த ரசத்திற்கு ஏற்ற நாயகனாக அலைந்துவிடுகின்றான். விராட நகரத்தில் போர்க்கொடி உயர்த்தப்பெற்ற பொழுது இவன் அந்தப்புரத்தில் மறைந்து கொள்ளுவதும் இவனைப் பார்த்தன் வல்லந்தமாய்த் தேரில் ஏற்றிக் கொண்டு போர்க்களத்திற்குக் கொண்டு போனாலும் இவன் பயத்தால் நடுங்கி முகத்தைத் திருப்பிக்கொண்டு இருந்ததும், பகைவர்கள் ஓடிவிட்டனர் என்று அறிந்த வுடன் ஆறுதலடைந்து பெருமூச்செறிந்து தெளிவுற்றது. க.பா.-10