பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置盛台 கண்ணன் பாட்டுத்திறன் மான நிகழ்ச்சிகள் யாவும் பயத்திற்குத் தக்க சான்றாகவே அமையும். இந்தப் பாடலில் கொலை வேடன் பாரதி நாயகியைச் சந்தித்துக் காதல் பேச்சினைத் தொடங்கிய பொழுது, இவளைப் பய உணர்ச்சி ஆட்கொள்ளுகின்றது. -'அடி கண்ணே, எனதிருகண் மணியே-உனைக் கட்டித் தழுவமனம் கொண்டேன் சோர்ந்தே படுத்திருக்க லாமோ?-நல்ல துண்டக்கறிசமைத்துத் தின்போம்-சுவை தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் நல்ல தேங்கள் ளுண்டினிது களிப்போம்” என்றே கொடியவிழி வேடன்-உயிர் இற்றுப் போகவிழித் துரைத்தான். என்ற பகுதியில் பய உணச்சி தலைக்காட்டுகின்றதைக் காணலாம். இந்தப் பய உணர்ச்சியால் பாரதி நாயகி "இருகரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவற்றைச் சொல்லுகின்றாள் : ‘அண்ணா உனதடியில் வீழ்வேன்-எனை அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன் கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்றன் கண்ணாற் பார்த்திடவுந் தகுமா?’’ இந்தப் பகுதியில் பயத்தினால் ஏற்படும் நடுக்கத்தைக் காணமுடிகின்றது. இந்தச் சொற்கள் காமம் மீறி நிற்கும் கொடியவிழி வேடனின் செவியில் ஏறவில்லை. காமம் ஏறிய நிலையில் பேசுகின்றான் : "ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்;-நின தின்பம் வேண்டுமடி, கனியே,-நின்றன் மோடி கிறுக்குதடி தலையை,-நல்ல மொந்தை பழையகள்ளைப் போலே’’