பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிவழிக் கண்ணன் அங்கண் முல்லையின் தெய்வமென்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண்மால்' என்று திருமாலைச் சிறப்பித்துப் ப்ேகவர். முல்லைக்குரிய மக்களை, ஆயர் ஆய்ச்சியர் என்று வழங்குவர் பண்டைத் தமிழர்கள். தென்னவன் தொல்விசை நட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தவர் என்று இலக்கியமும் இவரைப் போற்றி உரைக்கும். இவர்கள், யதுகுலத்தில் தோன்றித் தம் குலத்தில் வளர்ந்தருளிய கண்ணனைத் தம் குலக் தெய்வமாகக் கொண்டுள்ளனர் எ ன் ைத நாம் அறிவோம். மாயோன் என்ற முல்லைத் தெய்வம் திருமாலின் அவதாரமான கண்ணன் என்பதும் நமக்குத் தெரியும். மாயோன், கண்ணன் என்ற சொற்கள் கருநிற முடையோன்’ என்ற ஒத்த பொருளுடையன. இந்தக் கண்ணனின் இறைமைப் பண்பின் காரணமாகவே இவனுக்கு உரிமையும் த ைல ைம யு ம் இவனை வந்தடைந்தன என்பது நாம் நினைவிலிருத்தவேண்டிய ஓர் உண்மை. மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில் தாவா விழுப்புகழ் பூவை நிலையும்" என்பது பூவைநிலை என்னும் புறத்துறையைக் கூறும் தொல்காப்பிய நூற்பாப் பகுதியாகும். இதில் ஆசிரியர் தொல்காப்பியனார் மாயோனின் பொருள்சேர் புகழ் களைப் ப்லாடச் சிறப்பித்துக் கூறுவதனாலும் இதனைத் தெளியலாம். இங்ங்ணம் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே கண்ணனைப் பரதெய்வமாகக் கொண்டு அவனது குழவிச் سمس س-----------------------سسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسه 2. பெரியபு. திருக்குறிப். 18 3. தொல். பொருள். புறத்திணை-5