பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் 盈4亨 கேட்டவுடன் பயத்தால் கண்ணா!' என்று அலறி வீழ்கின்றாள் பாரதி நாயகி, பயாநக ரசம் உச்சநிலையை எட்டுகின்றது. ரசமும் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றது. சற்று நேரம்கூட ஆகவில்லை. இதற்குள் போதம் தெளிந்து விடுகின்றது நாயகிக்கு. அவள் வேடனைக் காணவில்லை. கண்ணன் தரிசனம் அவளுக்குக் கிட்டுகி ன்றது. வேடன்தான் கண்ணனாக மாறினானோ? சேலையை வளரச் செய்து திரெளபதியின் மானத்தைக் காத்த கண்ணன் பாரதி நாயகியின் கற்பைக் காக்க நேரில் வந்து விடுகின்றான்! இவளது அபயக்குரல் கண்ணனின் அருள் காக்கச் செய்து விடுகின்றது. அச்ச உணர்ச்சி திடீ. ரென்று வியப்புணர்ச்சியாக-அற்புத ரசமாக-மாறிவிடு கிறது. ரசக் கலப்பும் ஒருவித ரசனையைத் தந்து நம்மை மகிழ்விக்கின்றது. கான்காம் பாடல் : பாரதி நாயகி க ண் ண னி ட ம் பாங்கியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது இப்பாடல். காதல் இலக்கியத்தில் துரது விடுதல் ஒர் இன்றியமை யாத மரபாக அமைந்துவிட்டது. அந்த மரபை யொட்டியே இந்தப் பாடலில் தூதுக் கூறு அமைந்துள்ளது. "தங்கப்பாட்டு மெட்டில் அமைந்த இப்பாடல் நாட்டுப்புற இலக்கியத்தை நினைனவுறுத்தும் பாங்கில் நடைபெறு கின்றது. கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் (அடி தங்கமே தங்கம்) கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் என்று பாடல் தொடங்குகின்றது. அடுத்து நாயகி தோழியிடம் நாயகனுக்குச் சொல்ல வேண்டிய செய்தியை 21. அற்புத ரசத்தின் விளக்கத்தை இயல்-6இல் கண்டு தெளிக. (இந்நூல் பக். 68-69D)