பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 & கண்ணன் பாட்டுத்திறன் நிரல்படக் கூறுவதாகப் படல் அமைந்துள்ளது. நாயகி செய்தியைக் கூறும்போதே சிருங்கார உணர்ச்சியும் சின உணர்ச்சியும் கலந்து வெளிப்படுவதைக் காணலாம். சிருங்கார ரசத்தைப்பற்றி இந்த இயலின் முற்பகுதியில் விளக்கியுள்ளோம். சின உணர்ச்சி-அதாவது வெகுளிச் கவைபற்றி-வடமொழியில் இது ரெளத்திரம் என வளங்கப்பெறும்-ஈண்டு விளக்குவது இன்றியமையாததா கின்றது. பகைவன் செய்த திச் செயல்களை நினைந்து மனம் கொதிக்கும் நிலையைக் குரோதம் என்று வழங்குவர். குரோத உணர்ச்சியில் மலர்ந்த ரசமே-சுவையே-- ரெளத்திரமாகும்; ரெளத்திர ரசமே தமிழில் வெகுளிச் கவை என்று வழங்கப்பெறுகின்றது. கரந்துறை வாழ்க்கை நிறைவு பெற்றதும் பாண்டவர்களும் எவ்வளவோ, இன்னல்களுக்கிடையில் போருக்கு ஆயத்தமாகின்றனர். பீமனுக்கு உள்ளம் பூரிக்கின்றது. தங்களை அவமதித்து வீண் சிரமங்களுக்கு ஆளாகிய துரியோதனனையும் துச்சாதனனையும் பழிவாங்க நல்ல தருணம் வாய்த்த தென்று உள்ளம் இன்பத்தால் பொங்குகின்றது. இந்நிலை யில் கண்ணனைத் தூதனுப்பிச் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று தருமபுத்திரர் தீர்மானித்தது அவன் செவியில் விழுகின்றது. சினம் தாங்கவில்லை; பொங்கி எழுகின்றது. தானே நேரில் போரில் இறங்கி துரியோதனனைப் பழிவாங்கத் தீர்மானிக்கின்றான். இதனையறிந்த சகாதேவன், ‘அண்ணா, பெரிய அண்ணனின் மனம் நொந்துவிடும். அண்ணனுக்கு விரோதமாகப் பேசுவது நீதியன்று என்று வேண்டிக் கொள்கின்றான். இதற்கு வீமன் அளித்த மறுமொழி என்ன? "அரக்கு மாளிகையில் அனலிட்டதும், நஞ்சு கலந்த சோற்றை,