பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் 罩4鄧 அளித்ததும், சூதாட்டத்தில் பாஞ்சாலியை அவமதித்ததும் சிறிய செயல்களால்ல. நம்முடைய உயிரையும் சொத்தை யும் பறிக்க வழிதேடின கொடியவன் துரியோதனன். அவனை நான் விட்டு வைக்கப்போவதில்லை. அவனுக்கு துணைசெய்த துச்சாதனனனையும் விட்டுவிடமாட்டேன். கண்ணன் பதத்தில் ஆணையிட்டுச் சொல்லுகின்றேன். 'துரியோதனனின் தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன். தம்பி துச்சாதனனின் தோள்களைப் பிய்ப்பேன். அங்குக் கள் என்று ஊறும் வெங்குருதியைக் குடிப்பேன். உன் அண்ணன் சமாதானம் செய்து கொள்ளட்டும், நான் போர் தொடுக்கிறேன். இன்று ஒரு நாள் அவர் எனக்கு அண்ணனும் அல்ல; நான் அவருக்குத் தம்பியுமல்ல' என்கின்றான்; இத்தகைய மனவேகம்தான் "குரோதம்' என்பது. இதனை வீரத்திற்கு உறுப்பாக வும், அளவு கடந்து நிற்கும் வீரத்தின் நிலை என்றும் கூற லாம். நாட்டியக் கலையில் பரத முனிவர் ரெளத்திர ரசத்தினின்றும் கருணம் ஏற்படுவதாகக் கூறுவர். மேலும் குரோதம் என்பது மனிதனுடைய பகுத்தறிவுவினைக் கீழடக்கிப் பொங்கிஎழும் ஓர்உணர்ச்சி. அஃது ஒரு பேயின் வேகத்தோடு கிளம்புவதால் அதன் செயல்கள் பின்னர் வருந்தத் தக்கவையாகவே இருக்கும். பாரதியாரின் இந்தப் பாடலும் நா ய கி யி ன் பேச்சாகவே அமைந்துள்ளது. கண்ணன் மன நிலையை கண்டு வரவேண்டும் என்று கூறும் வரையிலும் உள்ள பகுதியிலும் இறுதியில், நேர முழுதிலுமப் பாவி தன்னையே-உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் திர ஒரு சொலினைக் கேட்டு வந்திட்டால்-பின்பு தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்