பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 50 கண்ணன் பாட்டுத்திறன் என்று பாட்டை நிறைவு செய்யும் பகுதியிலும் சிருங்கார ரசம் கொப்புளித்து நிற்கின்றது. சிருங்கார ரசத்தின் தன்மையை அறிந்து இப்பகுதிகளில் அதனைத் துய்த்து மகிழாம். எஞ்சியுள்ள பகுதிகள் யாவும் ரெளத்திர ரசத்தில் தோய்ந்தவை. சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே-எங்கும் தோழமை இல்லையடி தங்கமே தங்கம்; என்ன பிழைக ளிங்கு கண்டிருக்கிறான்?-அவை யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ! மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை மறைந்து திரிபவர்க்கு மானமு-முண்டோ? பொய்யை உருவமெனக் கொண்டவ னென்றே-கிழப் பொன்னி உரைத்ததுண்டு தங்கமே தங்கம் சோர மிழைத்திடையர் பெண்க ளுடனே-அவன் சூழ்ச்சித் திறமைபல காட்டுவ தெல்லாம் வீர மறக்குலத்து மாத ரிடத்தே வேண்டிய தில்லையென்று சொல்லிவிடடி! என்ற பகுதிகளில் ரெளத்திரத்தைக் காணலாம். இடைக் குலப் பெண்டிரிடம் காட்டும் கைவரிசைகளெல்லாம் மறக் குலத்து மாதரிடம் மிசையா என்று சொல்லுமாறு தோழியிடம் பணிப்பதில் ரெளத்திரத்தின் கொடு முடியைக் காணலாம். ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம் துாற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே சொல்வி வருவாயடி தங்கமே தங்கம். என்ற பகுதி தமிழ் மரபுக்கு-தமிழ்ப் பண்பாட்டிற்குஒத்து வரவில்லை. சங்ககால அக இலக்கிய மரபையொட்டி, இஃது அமையவும் இல்லை. காதலன் காதலியிடம் பேசும்