பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் I5 I "அந்தரங்கப்பேச்சை-தனியிடத்தில் பேசினவற்றைநகர் முரக அடிப்பித்து ஊரம்பலப்படுத்தும் முறை அகத்திணை மரபுக்கு ஒவ்வாதது, ஒருகால் பரகால நாயகி (திரு மங்கையாழ்வார்) பெண்மடலேறும் வழக்கத் தைப பேசுகின்றாளே, அதனையொட்டி பாரதி நாயகியும் துணிந்து விட்டாளோ என்று நின்ைக்கத் தோன்று கின்றது. -"மான் நோக்கின் அன்ன நடையார் அலர்ஏச ஆடவர்மேல் மண்ணும் மடல்ஊரார்' என்பதுஓர் வாசகமும் தென் உரையில் கேட்டு அறிவதுண்டு அதனையாம் தெளியோம்! மன்னும் வடநெறியே வேண்டினோம்? என்ற பாசுரப்பகுதிதான் இத்துணிவைத் தந்திருக்க வேண்டும் : ஐந்தாம் பாடல் : ஆசை முகம் மறந்து போச்சே' என்று தொடங்கும் இந்தப் பாடல் உண்மையிலேயே ஒர் அற்புதமான பாடல். பாரதிநாயகியின் அநுபவமாக வெளிப்படும் இந்த அநுபவம் முற்காலக் கவிஞர் களிடையேயும் இக்காலக் கவிஞர்களிடையேயும் காண முடியாத ஒர் அற்புத அநுபவமாகும். நாயகியின் பிரிவாற்றாமைமையை நுவல்கின்றது. இப் பாடல். நாயகி தோழியிடம் பேசுகின்றாள் : தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும்-இந்த வைய முழுதுமில்லை தோழி! (1) பூச்சி உலகில் வண்டுகள் தேனை மறக்கா; தாவர உலகில் பூக்கள் கதிரவன் ஒளியை மறக்கா; பயிர்கள் வானை 22. பெரிய திருமடல்.