பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

赢莎路 கண்ணன் பாட்டுத்திறன் (மழையை) மறக்கா. இந்த நிலையை இந்த வையகத்தில் காணமுடியாது. இஃது அநுபவ ரீதியான உண்மை. இங்ங்னமே தன்னுடைய உள்ளம் (நாயகியின் உள்ளம்) கண்ணனின் உறவையே சதா நினைந்த வண்ணமிருக்கும்; வாயும் அந்த மாயனின் புகழினையே உரைத்துக் கொண் டிருக்கும், ஒய்வும் ஒழிதலுமில் லாமல்-அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம் வாயும் உரைப்பதுண்டு கண்டாய்-அந்த மாயன் புகழினையெப் போதும் (2) தன் அவப்பேற்றின் காரணமாகத் தன் கண்ணில் (மனக் கண்ணில்) தெரியக் கூடிய கண்ணனின் தோற்றத்தில் அவனது முழு அழகும் இல்லை. அவன் முகத்தை உற்று நோக்கினாலும் அவனது மலர்ச்சிரிப்பு-மோகனப் புன்னகை-தென்படவில்லைலையே! (3) என்று கவல் கின்றாள் பாரதிநாயகி. கண்கள் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு; பெண்க ளினத்திலிது போலே-ஒரு பேதையை முன்புகண்ட துண்டோ? (4) இந்தப் பாடற்பகுதி அருட்சக்தியில் தோன்றிய அமுதக் கவிதை, சாதாரண மக்கள். குழந்தைகள் இவர்கள் பேசும் சொற்கள்தாம் இதில் கையாளப் பெற்றுள்ளன. இவற்றைக் கொண்டு கவிஞர் ஓர் இரசவாதமே செய்திருப்பதைக் கண்டு மகிழலாம். இறைவனைப்பற்றி உருகி உருகிப்பாடி யிருக்கும் மணிவாசகப் பெருமான், ஞானசம்பந்தப் பெருமான், ஆண்டாள். நாவுக்கரசர், இராமலிங்க அடிகள் இவர்கள் கவிதையின் உச்சத்தில் கனிந்திருக்கும் அனல் - தன்மையை,