பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காதலன் I 53 கண்கள் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க் கண்ண னுரு.மறக்க லாச்சு என்ற அடிகளில் எவ்வளவு எளிதாக அமைத்து விடுகின்றார் பாரதியார் நாயகி வாக்காக இது வெளிப் படும்போது நம்மை கவிதையதுபவத்தின் கொடுமுடிக்கே உந்தித் தள்ளிவிடுகின்றது! பாரதியார் பாடல்களைப் பதிப்பித்த நூல்களில் காணப்பெறும் வரிசையை நீக்கி இங்குக் காட்டப் பெற்றுள்ள வரிசையில் பாடல்களைப் பாடி அநுபவிக்க வேண்டும். இந்தப் பதிப்புகளில் முதலாவதாகக் காணப் பெறும் ஆசை முகம் என்று தொடங்கும் பாடலை இறுதியாகப் படித்து அநுபவிக்க வேண்டும். ஆசை முகமறந்து போச்சே-இதை ஆரிடம் சொல்வேனடி தோழி: நெச மறக்கவில்லை நெஞ்சம்-எனில் நினைவு முகமறக்க லாமோ? இதில் பொதிந்துள்ள அநுபவம் அரிது; அலாதியானது. இதனை அநுபவிக்க அநுபவிக்க ஆரா அமுதமாக" இருப்பதைக் கவிதைகளை உண்மையாகவே சுவைத்து மகிழும் ஒரு சிலரே காண்பார்கள். இறுதியாகவுள்ள 'கண்ணன் முக மறந்துபோனால் என்று தொடங்கும் பகுதியை நீக்கி விட்டால் கூட நல்லது என்றே தோன்று கின்றது. காரணம் இஃது எதிரான உணர்ச்சியைக் கிளப்பி நம் அநுபவத்தையே குலைத்துவிடுகின்றது" 23, Meenakshi Sundaram, (Dr) : A Study on the Poetical Works of Bharathi (Paari Nilayam, Madras-600001 (1965)