பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் -14 கண்ணன்-என் காந்தன் தமிழ் இலக்கியத்தில் சிறந்த பகுதி அகத்துறை இலக்கியம் ஆகும். இது களவு, கற்பு என்று இரு வகை யாகப் பகுத்துப் பேசப்படும். களவுக் காலத்தில் தலைவனும் தலைவியும் ஒருவர்மேல் மற்றொருவர் கொண்டிருக்கும் அன்பு-ஆராக் காதல்-இ வ் வ ள வு ஆவ்வளவு என்று எடுத்துக் கூறல் இயலாது, இக்காலத்தில் தலைவன் கையுறை கொண்டு தலைவியைச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் இக்கையுறை தழை, மலர் மாலைபோன்ற பொருள்களாகவே இருக்கும். இக் கையுறை"பற்றிய செய்தியை இறையனார் களவியல், திருக்கோவையார்’, தஞ்சைவாணன் கோவை போன்ற நூல்களில் காணலாம். இங்குக் காந்தன்” என்ற சொல் களவுக் காலத்தில் தலை வனுக்குப் பாரதியார் சூட்டிய பெயராகும். இங்ங்ணமே இக் கவிஞர் பெருமான் அத்தினபுரத்துப் பெண்களை 1. இறை, கள. நூற்பா - 12 (உரை) 2. திருக்கோவை. சேட்படை - செய் 90-96, 3. தஞ். கோ. 97.