பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காந்தன் 董5覆 "மலர்விழிக்காந்தங்கள்' என்று சுட்டுவதையும் ஈண்டு நினைவுகூரலாம். களவு வாழ்க்கையில் காதலர்கள் ஒருவரிக்கொருவர் சந்திக்கும் வாய்ப்புகள் அருகியிருக்கும் போது இருவர் மாட்டும் காதல் உணர்ச்சி காந்த சக்தி போல் உறைப்பாக இருக்குமாதலால் ஆண்மகனைக் 'காந்தன்' என்றும், பெண்மகளைக் காந்தம்' என்றும் கட்டியிருப்பதும் எவ்வளவு பொருத்தமாகத் தோன்று கின்றது! தவிர, காதலிக்குக் காதலன் காந்தன்'-ஈர்ப் பவன், ஈர்க்கப்படுகின்றவன்-என்ற நிலையில் இருப்பான். ஆனால், இங்கு ஈர்ப்பவள் பெண்ணே ஆவள். ஆதலால் அவள் காந்தம் என்றே தானியாகு பெயரால் உருவக மாகக் குறிக்கப் பெற்றிருத்தல் சிந்தித்து மகிழத்தக்கது. ஒர் இலாடகாந்தம் அல்லது கட்டைக்காந்தத்தின் அருகில் ஒரு காந்த ஊசி வைக்கப்பெறுங்கால் அந்தக் காந்தஊசி சுற்றியலைவதை ஈண்டு நினைவுகூர்க. உலக வாழ்வில் பெரும்பாலும் ஆணே பெண்ணை நாடி அலைகின்றானே யன்றி பெண் ஆணை நாடி அலைவதில்லை. ஆயின், இதிகாச உலகில் கோபியர் கண்ணனை நாடி அலைவது சீவான்மாக்கள் பரமா ன் மாவை நாடி அலைவதற்குக் குறியீடாகும். கண்ணனாகிய காந்தன் காதலிக்கு என்னென்ன பொருள்களைக் கையுறையாகக் கொண்டுவந்து தருகின் றான்? கவிஞர் கூறுவார் : 4. பாஞ்சாலி சபதம் - 13 5. காந்தள் என்று குறிப்பிட்டால், அது மலரைக் குறிக்குமேயன்றி மாதினைக் குறிக்காது. இல்லாள் என்ற பெயருக்கு இல்லான்’ என்ற பொருள் பொருந்தாததுபோல், 'காந்தன்' என்ற பெயருக்கு காந்தள் என்ற பெயர் பொருந்தாமையை எண்ணி உணர்க,