பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 53 கண்ணன் பாட்டுத்திறன் கனிகள் கொண்டுதரும்-கண்ணன் கற்கண்டு போலினிதாய் பணிசெய் சந்தனமும்-பின்னும் பல்வகை அத்தர்களும், குணியும் வாண்முகத்தான்-கண்ணன் குலவி நெற்றியிலே இனிய பொட்டிடவே-வண்ணம் இயன்ற சவ்வாதும் மதுரமான கனிகள், குளிர்ப்பூட்டும் சந்தனம், நறுமணம் விளைவிக்கும் அத்தர் வகைகள், கோலப்பொட்டுக்குரிய சவ்வாதும் தருகின்றான். இவ ற் ைற தி தவிர வேறு பொருள்களையும் அன்களிப்பு செய்கின்றான் : கொண்டை முடிப்பதற்கே-மணங் கூடு தயிலங்களும், வண்டு விழியினுக்கே-கண்ணன் மையுங் கொண்டு தரும்; தண்டைப் பதங்களுக்கே-செம்மை சார்ந்து செம்பஞ்சுதரும்: பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன் பேசருந் தெய்வமடி! இக்காலத்தில் மகளிர் கொண்டை போடுவதில் கலை யார்வம் செலுத்துகின்றதையும், குழந்தைகள் முதல் வளர்ந்தவர்கள் வரை கண்ணுக்கு மையிட்டுக் கொள் வதையும், தண்டைகள் குலுங்கும் அழகிய பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பைப் பூசிக்கொள்வதையும் கூர்ந்து கவனித்த கவிஞர் இவற்றையெல்லாம் கண்ணன் தன் காதலிக்குக்-காதலிமார்க்குத்-தருவதாகக் கற்பனையில் கண்டு மகிழ்கின்றார். இதை ஒரு பெண் தன்னைச் சூழ்ந்துள்ள மற்ற பெண்களுக்குக் கூறுவதாகக் கவிதைகள்