பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

毫 கண்ணன் பாட்டுத்திறன் செயல்களில், பிள்ளைப்பிராயத்தில் ஆற்றிய அருஞ்செயல் களில், தமிழ் மக்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதற்குத் தொல்காப்பியத்தில் வேறொரு சான்றும் உள்ளது. மானிட ராகிய பெண்மக்கள் தம்மினத்து ஆண் மக்களிடமும் ஆண்குழவிகளிடமுமே யன்றி கடவுளரிடத்தும் கடவும் குழவிகளிடத்தும் காமப்பகுதி செலுத்தற்குரியர் என்பதற் குத் தொல்காப்பியர் விதிகள் அமைத்துக் காட்டுவர். காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் மருங்கினும் என்மனார் புலவர்' குழவி மருங்கினும் கிழவ தாகும்." என்ற நூற்பாக்களைக் காண்க. இஃது இத்தகைய தெய்வக் குழவியாகிய கண்ணனிடம் ஆயமகளிர் கொண்ட காதல் வெள்ளத்தை உட்கொண்டு கூறிய தாகவே கொள்ளற்பாலது. சிலப்பதிகாரம், ஆழ்வார்கள் அருளிச்செயல்கள் இவற்றில் அமைந்த காதற் பாக்கள் யாவும் ஆயர் பெருமக்கள் கண்ணனிடம் வைத்துள்ள காமப் பகுதியையே கட்டி உரைப்பனவாகும். வாசுதேவனான இக் கண்ணனை, சங்கர்ஷண மூர்த்தி யான பலதேவனுடன் கொண்டு போற்றிய முறை விந்திய மலைக்கு அப்பாலுள்ள வடபுலத்தில் ஒரு காலத்தில் மிகுபுகழ் பெற்றிருந்தது என்பதைப் பண்டைய வடநூல் களாலும் கல்வெட்டுகளாலும் தெளியலாம். இந்த 4. தொல். பொருள். புறத்திணை.23 5. மேலது.24 5. திருமாலின் ஐந்து நிலைகளில் ஒன்று வியூகம்’ இங்கு இறைவன் வாசுதேவன் சங்கர்ஷணன், பிரத்தியும்னன் அநிருத்தன் என்று நான்காக வைத்துப் பேசப்படுவான். விவரம் தத்துவத் திரயம்' என்ற நூலில் காண்க. 7. Dr. Bhandaikar’s Vaishnavism Saivism and other Minor Religous Systems pp (3-4.)