பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காந்தன் 董葛7 அமைத்த திறம் மகிழ்ச்சி தருகின்றது. தானே சொன் னால் அது இதழ் நிரூபர் ஒருவர் சொல்வதுபோல் உயிரற்ற செய்தியாகும் என்று கருதிய கவிஞர் சங்க இலக்கியப் பாணியில் கூற்று இலக்கியமாக்கி விடுகின்றார். மார்பில் தொய்யில் எழுதுவதற்கு குங்குமமும் கொண்டு வருகின்றானாம். மணப்பொருள் சந்தையில் புதுப்புதுப் பொருள்கள் வந்தவண்ணம் உள்ளன. கவிஞர் இவற்றையெல்லாம் கற்பனையில் காண முடியவில்லை. தன் இயலாமையை ஒர் அற்புத உத்தியால் நிறைவுசெய்து விடுகின்றார். இவற்றை வாங்குவதற்கு சங்கையிலாத பணம் தருவதாக அமைத்து விடுகின்றார், பாடலை. பங்க மொன் றில்லாமல்-முகம் பார்த்திருந் தாற்போதும்; மங்கள மாகுமடி!-பின்னோர் வருத்த மில்லையடி! என்று பாடலை முத்தாய்ப்புடன் நிறைவு செய்கின் றார். கண்ணன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந் தாலே போதும் என்பது இந்த நங்கையின் நினைப்பு. இந்த நங்கைதானே கவிஞர்: ஒவியர் மணி இரவிவர்மா தன் கை வண்ணத்தால் தீட்டிய கண்ணனின் மூவண்ண ஒவியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது உண்மை யான கண்ணனை நேரில் பார்ப்பது போன்ற அநுபவம் ஏற்படுகின்றதல்லவா? இந்த இடத்தில், நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்டேனே." 5. பெரு, திரு. 4:9.