பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 கண்ணன் பாட்டுத்திறன் என்ற குலசேகராழ்வாரின் பாசுரத்தையும் நினைவுகூர் கின்றோம். ஆழ்வார் பெற்ற அநுபவத்தைப்போல், நாம் இரவிவர்மாவின் ஒவியத்தை நோக்கிக் கண்ணனை நேரில் பார்க்கும் அநுபவத்தைப் பெறுவது போல், கவிஞர் பெருமானும், பங்கம்ஒன் றில்லாமல் பார்த்திருந் தாற் போதும் என்று மங்கையொருத்தியின் வாய்மொழியாகப் பேசிக் கண்ணனை மானசீகமாக அநுபவித்து மகிழ்கின்றார். பகவதநுபவம்” என்பது கிடைத்தற்கரிய, கிட்டற்கரிய பேறு அல்லவா? இந்தப் பாடலின் தலைப்பில் இப்பாடல் சிருங்கார ரசத்தைப் பயக்கக்கூடியது என்ற குறிப்பைத் தந்துள்ளார் இதனைச் சற்று விளக்குவது இன்றியமையாததாகின்றது. தமிழில் தொல்காப்பியர் குறிப்பிடும் உவகைச் சுவையைத் தான் வடமொழிவாணர்கள் சிருங்கார ரசம் என்று கூறுவர். கவிஞர்கள் சிருங்காரத்தைக் கையாண்ட விதத்தையும் தமிழ் வடமொழி இலக்கியங்களைச் சிருங்காரச் சுவை ஆட்கொண்டிருக்கும் நிலையையும் நோக்கியே இதனை ரசங்களின் மன்னன்’ என்று குறிப் பிட்டது சரி என்றே தோறுகின்றது. இலக்கியங்களில் சிருங்காரத்தைத் துய்க்க உள்ளத் துய்மையும் சுவைக்கும் பழக்கமும் வேண்டும். நமது மனத்தில் கிடக்கும் அற்பமான காம வெறியாகிய சிந்தனையோடு காவியங்களைச் சுவைக்கப் புகுவது இலக் கியங்களை இகழ்வதாகும். கற்பனை உலகில் கானும் இன்பக் கனவுகளாகின்ற வருணனைகளைத் தூல உலகத் தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மதியினம் என்பதை உண்மைச் சுவைஞர்களே அறிவர். மேலும், பிரகிருதி அன்னையுடன்