பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் காந்தன் 互59 ஆன்மா என்னும் பரமசிவன் இன்புற்று விளையாடு வதிலேயே உலகம் பிறந்தது என்று மாமுனிவரிகள் போதித்துள்ளார்கள். இந்தத் திருவிளையாடலே சிருங் காரம் என்பது அவர்கள் கருத்து. அந்தச் சிருங்காரமே உலகத்தின் அடிப்படைத் தத்துவம் என்பதை விளக்கவே கவிஞர்கள் இலக்கியங்களில் அந்த ரசத்தை அதிகமாகக் கையாண்டுள்ளார்கள் போலும்! இந்தப் பாடலில் கண்ணன் என்ற காந்தன் தன் காதலிக்குப் பல்வேறு வகைப்பட்ட கையுறைகளைத் தருவதாக வருணித்துள்ளார் கவிஞர். காதலன் கையுறை களைத் தருவதாலும், காதலி அவற்றை ஏற்பதாலுமே இருவரும் இன்பத்தின் கொடுமுடியை எட்டிவிடுகின்றனர். காதலி தான் பெற்ற இன்பத்தைத் தோழிக்கு உணர்த்து வதாகப் பாடல் அமைந்துள்ளது. கண்ணன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற கருத்தில், பங்கமொன் றில்லாமல்-முகம் பார்த்திருந்தாற் போதும் என்ற அடிகள் அமைகின்றன. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது." என்று காதலன் கூற்றாகக் கூறியதை இங்குப் பாரதியா? காதலியின் கூற்றாக அமைத்துள்ளார். ஒருவர் முகம் மற்றவருக்கு இன்பம் பயப்பதுதானே உண்மை? முக தரிசனம் எழுப்பும் உணர்ச்சியை உண்மைக் காதலர்களே ஆறிவார்கள். 6. குறள் - 1092.