பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-15 கண்ணம்மா-என் காதலி சிமய இலக்கியங்களில்-சி ற ப் பாக (ళళడు இ லக் கி யங் களி ல்-சீவான்மாவைத் தலைவியாகவும் பரமான்மாவைத் தலைவனாகவும் உறவு கற்பித்துக் கூறும் மரபு உண்டு. இது நாயக-நாயகி உறவு என்று வழங்கப் பெறும். இது முன் இயலிலும் குறிக்கப்பெற்றது. ஆனால் கண்ணம்மா-என் காதலி என்ற தலைப்பில் காணப்பெறும் ஆறுபாடல்களிலும் இந்த உறவு முறையை மாற்றிப் பேசுகின்றார் கவிஞர். இக் கவிதைகளில் இறைவனைத் தலைவியாகவும், தன்னைக் காதலனாகவும் கொண்டு பேசுகின்றார். மரபுக்கு மீறிய இம் முறையை பாரதியார் எங்கோ தெரிந்திருக்கவேண்டும். இதனைச் சிந்தித்து ஆராயுங்கால் திருவாசக வியாக்கியானம்’ எழுதிய (1834) சீகாழித் தாண்டவராயரின் குறிப்பு தென்படுகின்றது. அக்குறிப்பு : 'பத்தி முத்திக்கு உவமை பெத்தம்; பேரின்பத்துக்கு உவமை சிற்றின்பம் என வைத்து, உடம்பையுடைய யோகிகள்பால் உற்ற சிற்றின்பம், அடங்கத்தன் பேரின்பமாக, பேரின்கமான பிரம்மக்கிழத்தியோடு ஒரின்பமான அன்பே சிவமாய், அருளே காரணமாக கத்தாவத்தையே நிலமாக, நாயகி பரம்பொருளாக, நாயகன் பக்குவான்மாவாக, தோழி திருவருளாக, தோழன் ஆன்ம ப்ோதமாக, நற்றாய்