பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் காதலி 罩莎葛 பரையாக, திரோதாயி செவிலித்தாயாக மேலும் நாயகன் கூற்றெல்லாம் நாயகி கூற்றாகவும், நாயகி கூற்றெல்லாம். நாயகன், கூற்றாகவும் நிகழ்ந்துவரும். அவை அநுபூதியாற் காண்க. இந்தக் குறிப்பில் நாயகி பரம்பொருளாக, நாயகன் பக்குவான்மாவாக என்ற பகுதி மட்டிலும் பாரதியாரின் மனத்தைக் கவர்ந்திருத்தல் வேண்டும்; இதனை அடிப்படையாகக் கொண்டே இப் பாடல்களில் சீவான்மா பரமான்மா உறவு முறையை தோசையைத் திருப்பிப் போடுவது போல, மாற்றியமைத் துள்ளார் என்று கருதலாம். அல்லது கவிஞர்க்கே உரிய தனி உரிமத்தைக் கொண்டு (Poetic License) இங்ஙனம் அமைத்துக் கொண்டார் என்று கொள்ளினும் இழுக்கில்லை. இந்த அடிப்படையில் இந்த ஆறுபாடல் களையும் ஆராய்வோம். முதற்பாடல் : பாடலை ஆய்வதற்கு முன் தமிழரின் அகத்திணை மரபுபற்றி ஒரு சில சொற்கள், பருவம் நிரம்பிய ஆடவனையும் மகளையும் ஒன்றாகப் பிணைப்பது "காதல் உணர்ச்சியாகும். ஒத்த அன்புடைய தலைவன் தலைவியர் ஒருவரை யொருவர் காண்பது ஊழ்வலியினால் என்பது ப எண் ைட ேய | ர் கருத்து. இதனைத் தொல்காப்பியர், ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப.” என்று கூறுவர். இங்ங்ணம் ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப் படும் முதற்காட்சிக்கு நல்லூழின் ஆணையே காரண மென்பார் உயர்ந்த பாலதாணையின்' என்று கூறினார்: 1. பன்னிரு திருமுறை வரலாறு-இரண்டாம் பகுதி . பக். 273. 2 . தொல், பொருள். கள. 2.

  1. i منتسمعtitT هته