பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置翰盛 கண்ணன் பாட்டுத்திறன் அவ்வூழின் ஆணைக்குக் காரணம் அவ்விருவரும் பண்டைப் பிறப்புகளிற் பயிலியது கெழிஇய நட்பென்பார், ஒன்றி உயர்ந்த பாலதானை' என்று உரைத்தார்; ப்ல பிறவி களிலும் பழகிய அன்பின் தொடர்ச்சியே ஒருவரை யொருவர் இன்றியமையாதவராகக் காணுதற்குரிய காதற் கிழமையை வழங்கியதென்பார் "ஒத்தகிழவனும் கிழத்தி யும் காண்ப என்று சொன்னார். ஒத்த பருவத்தார் ஒரு வரை யொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்றாமையின் ஒன்றி உயர்ந்த பாலதாணையின் காண்ப என்றார் ஆசிரியர் என்பதை உளங்கொள்ளுதல் வேண்டும். ஈண்டுக் காணுதல்’ என்பது தனக்குச் சிறந்தா ராகக் கருதுதலை. இங்ங்ணம் தலைவன் தலைவி என்ற இருவருள்ளத்தும் உள்நின்று சுரந்த ஆன் பின் பெருக்கினால் நடைபெறுவது தான் தான், அவள் என்ற வேற்றுமையின்றி இருவரும் ஒருவராயொழுகும் உள்ளப்புணர்ச்சியாகும். இதனை இறையனார் களவியல், அதுவே, தானே அவளே தமியர் காண காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்.” என்று குறிப்பிடும். இந்த உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் ஒருவரையொருவர் இன்றியமையாது ஒழுகும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பே சாந்துணையும் நிலை பெற்று வளர்வதாகும், இதன் பின்னர் நடைபெறுவது இயற்கைப் புணாச்சியாகும்; இதுவே தெய்வப்புணர்ச்சி: என்றும் வழங்கப் பெறும். இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர் தலைவனிடம் பெரும்பான்மை நிகழும் காட்சி, ஐயம் தெளிதல், தேறல் 3. இறை கள 2.