பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் காதலி 重爵领 என்ற நான்கு நிலைகள் ஆகும். இதனைச் சிந்தாமணி ஆசிரியர் பதுமையார் இலம்பகத்தில் மிக அருமையாக விளக்குவதை இந்நூலாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்." ஆண்டுக் கண்டு தெளிக. பாரதியார் இந்தப் பாடலில் விளக்குவது காட்சி’ என்ற நிலை. தமிழ் இலக்கிய மரபுப்படி நான்கு நிலை களையும் வேற்கொள்ளாமல் இவர் காதலியைக் கண்ட வுடன் அவளது காட்சியால் தம்மையே இழந்த நிலையில் பேசுகின்றார். அவளது அற்புதமான திருமேனியழகில் ஈடுபட்டுச் சிருங்கார ரசத்தில் ஆழங்கால் பட்டுப் ப்ேசுகின்றார். இதற்கு முன்னர் பாரதியார் நாயகன் நிலையிலிருந்து கொண்டு கண்ணம்மாவின் எழிலை, எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ! எங்கள் கண்ணம்மா முகஞ்செந் தாமரைப்பூ: எங்கள் கண்ணம்மா நுதல் பாலசூர்யன். என்று வருணித்துள்ளார். மேலும், இங்கு வருணிக்கும் திறன் பாண்பெருமாள் திருவரங்கப் பெருமானை திருவடி முதல் திருமுடிவரையில் வருணித்துள்ள திறனை நினைக்கச் செய்கின்றது." மேற்குறிப்பிட்ட கண்ணம்மா-என் காதலி' என்ற முதற் பாடலில் கண்ணம்மாவின் காட்சியில் 4. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை-(முதற் பதிப்பு). பக். 83 - 88. 5. தோ. பா.-55 கண்ணம்மாவின் எழில். 6. முதலாயிரம் - அமலனாதி பிரான்,